மணப்பாறை அருகே மரகத பூஞ்சோலை திறப்பு

0 197
Stalin trichy visit

திருச்சி, செப். 19  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இடையபட்டி ஊராட்சிக்குட்பட்ட கானமலை அடிவாரத்தில் வனத்துறையின் சார்பில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் சுமார் 25 லட்சம் மதிப்பில் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டது. இதனை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது இன்று திறந்து வைத்து புதிதாக மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

பூஞ்சோலையில் சுமார் 625 வகையான மரங்கள் நடப்பட்டுள்ளது. இதில் வனவிலங்குகள் பயனடையும் வகையில் மகிலம், மா, சீத்தா, கொய்யா, நாவல் போன்ற மரங்களும் நடப்பட்டுள்ளன. மேலும் 27 நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகளும் இங்கு நடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கும், இயற்கை காற்றை சுவாசிக்கும் விதமாகவும் இந்த பூஞ்சோலை அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் கிருத்திகா, வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.