வீட்டுக்கு ஒரு கழிப்பறை : சமூக பணி தின விழாவில் வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எடமலைப்பட்டி புதூர் தொடக்கப் பள்ளியில் திருச்சி வளர்ச்சி குழுமம் சார்பில் சமூக பணி தின விழா கொண்டாடப்பட்டது.
மாநகராட்சி தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர்
எழில் ஏழுமலை
தலைமை வகித்தார்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா, திருச்சி வளர்ச்சி குழும தலைவர் வழக்கறிஞர் திலீப், செயலாளர் யோகா விஜயகுமார், பொருளாளர் கதிரவன், ஒருங்கிணைப்பாளர்கள்
பிரேம் குமார், கமலக்கண்ணன், பிளட் ஷாம், அமைப்பாளர் JCB.ரியாஸ், பாட்ஷா
உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி மாவட்ட உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
வீட்டுக்கு ஒரு கழிப்பறை
ஊரெல்லாம் கட்டணும் விழிப்புணர்வு பாடலினை பள்ளி மாணவர்களுடன் பாடி
கிராமாலயா தொண்டு நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரன் பேசுகையில்,
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், சுகாதார சீர்கேடுகளும், நோய்களும் ஏற்படுகின்றன. கிராமாலயாவின் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்தை நாட்டின் முன்னோடி திட்டமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான தனி நபர் கழிப்பிடங்களை கட்டியுள்ளோம். நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் சுகாதார நலக் கல்வி குழுக்களை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன்மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள சுகாதார கழிப்பிட வளாகங்களை கட்டணக் கழிப்பிடங்களாக பராமரிக்கவும் பயிற்சி அளித்துள்ளோம். தொடர் விழிப்புணர்வு சேவை காரணமாக நாட்டின் முதல் திறந்தவெளி மலம் கழிக்க தடை செய்யப்பட்ட நகர்ப்புற குடிசைப் பகுதியாக 2002ல் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கல்மந்தை பகுதியும், நாட்டின் முதல் திறந்தவெளி மலம் கழிக்க தடை செய்யப்பட்ட கிராமமாக 2003ல் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம் தாண்டவம்பட்டியும் அறிவிக்கப்பட்டன.
இந்த இரு நிகழ்வுகளால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள், நகர்ப்புற குடிசைப் பகுதிகள் ஆகியன திறந்தவெளியில் மலம் கழிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்க முன்னுதாரணமாக அமைந்தன. தொடர் சுகாதார சேவைகளுக்காக 2017ல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “டாய்லெட் டைட்டன்” விருதை வழங்கினார். இந்திய அரசு பத்ம ஸ்ரீ விருதினை வழங்கியுள்ளது என்றார்.
முன்னதாக திருச்சி வளர்ச்சி குழும துணைத் தலைவர் தங்கமணி வரவேற்க
முகமது ஷரீப் நன்றி கூறினார்.
திருச்சிராப்பள்ளி வளர்ச்சிக் குழும நிர்வாகிகள் ரியாஸ் பாட்ஷா, மிலிட்டரி, நடராஜன், பூபாலன், டாக்டர் நவீன் மணி, மோகன், முகமது ஷரீஃப், கோபால், சையது முஸ்தபா, முகமது உமர் கதாப், மல்லீஸ்வரி முத்துச்செல்வி, சாந்தி பன்னீர்செல்வம், சீனிவாச பிரசாத், ருக்மணி, லிவிங்ஸ்டன் தாஸ், சீனிவாசன், வழக்கறிஞர் இராக்கண்ணன் உட்பட
பலர் கலந்து கொண்டனர்.