எதுமலை சாலையில் புறக்காவல் நிலையம் திறப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் வணிகர் சங்கம் சார்பில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தனர்.

மண்ணச்சநல்லூரில் உள்ள எதுமலை சாலையில் வணிகர் சங்கம் சார்பில் புறக்காவல் நிலையத்தை திருச்சி மாவட்ட வணிகர் சங்க தலைவர் கோவிந்தராஜூலு தலைமையில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் முன்னிலையில் .
இன்று திறப்பு விழா நடைபெற்றது.திருச்சி மாவட்ட வணிகர் சங்க தலைவர் கோவிந்தராஜூலு புறக் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தலைவர் சிவசண்முக குமார், மண்ணச்சநல்லூர் வணிகர் சங்கம் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பிரசன்னா, பொருளாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..