மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

0 543
Stalin trichy visit

திருச்சி, ஜன.11. தமிழர் திருநாள் பொங்கல் விழா வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

திருச்சியில் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மேயர் மு.அன்பழகன் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரை வைகோ (திருச்சி), அருண்நேரு (பெரம்பலூர்), மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளரச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சுரேஷ் ஆகியோர் கலந்து கொட்ணடு சமத்துவ பொங்கல் கொண்டாடினர். பின்னர் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டி போட்டி பார்வையிட்டனர். இவ்விழாவில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.