திருச்சியில் நாளை முன்னாள் படை வீரர் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

0 314
Stalin trichy visit

திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை ஏப்ரல் 28 ந்தேதி பிற்பகல் 4 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெற உள்ளது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக 2 பிரதிகள் ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம்.

இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.