முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை!

0 298
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வளநாடு முகம்மதியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. முன்னாள் இராணுவ வீரரான இவர் வீட்டை பூட்டி விட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்ரமணி உள்ளே சென்று பார்த்தார். வீட்டில் இருந்த பிரோவில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன்

நகை, ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், 24 பட்டுப் புடவைகள் திருடு போயிருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் இதுகுறித்து வளநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.