மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு காவிரி, கொள்ளிடத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டி உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 60 ஆயிரம் கன அடியாக
திறக்கப்பட்டுள்ளது – எந்நேரத்திலும் திறந்து விடப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது – திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு