தேர்தல் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுக்க வேண்டும் : மேயரிடம் கோரிக்கை
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்ணியின் மாநில பொருளாளர் சே. நீலகண்டன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கிளையின் சார்பாக மேயர் மு.அன்பழகனை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது திருச்சி மாநகர பகுதிகளில் BLO (Booth Level officer) ) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றும் ஆசிரியர்களை படிப்படியாக விடுவிக்க வேண்டும். மேலும் இப்பணியில் ஆசிரியர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் மாநகராட்சி அலுவலர்கள் நடத்துவது இல்லை என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. கேட்டுக்கொண்ட மேயர் ஆசிரியர்களை அவ்வாறு நடத்தும் அலுவலர்களை தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
அதேபோன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முறையான உத்தரவுகளை சரியான நேரத்தில், போதிய கால அவகாசத்துடன் வழங்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கும் மேயர் அவர்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும். சுப்ரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்க இருப்பதாக உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையை வேறு இடத்தில் அமைக்க கோருதல் சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கு 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் பணியாளர்களை நியமித்து உதவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைகள் அடங்கி மனு மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினார்கள். இச்சந்திப்பின் போது மாநகரத் தலைவர் ரெக்ஸ், மாநகரச் செயலாளர் அமல் சேசுராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் பெர்ஜித் ராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஹக்கீம் அலி ஆகியோர் உடன் இருந்தனர்.
