திருச்சியில் தமுமுக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது

0 348
Stalin trichy visit

திருச்சியில் தமுமுக தலைமை செயற்குழு பொதுக்குழு கூடுகிறது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் கழக தலைவர் பேராசிரியர். MH. ஜவாஹிருல்லா MLA அவர்கள் தலைமையில் 04.11.22 காலை 10.00 மணியளவில் திருச்சி என் எம் கே காலணி எஸ் எஸ் மஹாலில் நடைபெறுகிறது.

மமக பொது செயலாளர் ப. அப்துல் சமது MLA, தமுமுக பொது செயலாளர் பேராசிரியர். ஹாஜாகனி, மாநில பொருளாளர்கள் ஷபியுல்லாஹ் கான், கோவை உமர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழகத்தில் 68 அமைப்பு மாவட்டங்களில் கிளை கழகம் முதல் மாவட்டம் நிர்வாகம் வரை கழக அமைப்பு தேர்தல் விதிமுறைகளை கடைபிடித்து ஜனநாயக முறைபடி தேர்தல்கள் நடைபெற்று புதிதாக பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட 430 தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

கழகத்தின் செயல் அறிக்கைகள், வரவு செலவு கணக்குகள், அமைப்பு விதிகளில் திருத்தம் மற்றும் புதிய விதிகளை சேர்ப்பது என தலைமை செயற்குழுவில் பல்வேறு பொருள்களில் விரிவாக விவாதங்கள் நடைபெற இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.