பராமரிப்பு பணிகள்: முசிறியில் 5ஆம் தேதி மின்சாரம் நிறுத்தம்
முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், முசிறி சிங்காரச்சோலை புதிய பேருந்து நிலையம், ஹவுசிங் யூனிட் , கைகாட்டி, சந்தபாளையம், அழகாபட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி ,தண்டலை புத்தூர், அந்தரப்பட்டி, வேளாகநத்தம், தொப்பலாம்பட்டி, வடுகப்பட்டி, காமாட்சி பட்டி ,சிந்தம் பட்டி, கருப்பனாம்பட்டி, அலகரை, மணமேடு சீனிவாசநல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, திருக்ஈங்கோய் மலை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற 5. 11. 2022 அன்று சனிக்கிழமை காலை 9. 45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.