இந்து சமய அறநிலையத்துறை மீது பொய் பிரச்சாரம் : அமைச்சர் ரமேஷ் பேட்டி

0 19
Stalin trichy visit

திருச்சி, ஆக.24  அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தவர்கள் தங்குவதற்கு அன்பில் மாரியம்மன் கோவிலில் மண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தோம் அதற்கு எதிராக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் – திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சென்னையில் இருந்து நேற்று  விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்தார்  விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருகிறோம். அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபு தான். ஜனநாயகம் கடந்த ஆட்சியில் இல்லை அதனால் அது போன்ற வார்த்தைகளை மக்கள் கேட்டிருக்க முடியாது எங்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருப்பதால் அதைக் கேட்க முடிகிறது

சட்டசபையில் திமுகவினர் பக்கம் கேமராவை திருப்பினால் எப்படி ரீல்ஸ் போடுவது என்பது தெரியும். சில முன்னாள் அமைச்சர்கள் தகாத வார்த்தைகள் பயன்படுத்திகிறார்கள் அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா ?

நாங்கள் எந்த unparliment வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை.

மாற்றுக் கட்சியிலிருந்து முதலமைச்சரை நம்பி எங்கள் கட்சியில் இணைந்தவர்களை நிச்சயம் அவர் பார்த்துக் கொள்வார். பச்சைக் கூட்டத்தொடர் முடிந்த பின்பு அவர்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்பார்.

எங்கள் அரசின் மீதும் முதலமைச்சரை நோக்கியும் கேள்வி வரும்போது அதற்கு மற்ற அமைச்சர்கள் பதில் கூறுவதில் என்ன தவறு ?
எதிர் கருத்து இருந்தால் அவர்கள் தைரியமாக பேசட்டும்.

சட்டசபையில் கருத்துக்கள் சரியாக இருக்கிறதா கேள்விகள் சரியாக இருக்கிறதா பதில் சரியாக இருக்கிறதா என்பது தான் பிரச்சனை. நாங்கள் அறிவிக்கும் அறிவிப்புகளை எதிர்க்கட்சியினர் கவனிப்பதே கிடையாது.

திருச்சியில் உள்ள அன்பில் மாரியம்மன் கோவிலில் அம்மை பாதித்தவர்களுக்கு தங்கும் மண்டபம் என்கிற மண்டபத்தை அறிவித்தோம். அந்தக் கோவிலின் வழக்கப்படி அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அது சரியாகி விட்டால் அந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வோம் என வேண்டுதல் வைப்பார்கள். அம்மை பாதித்தவர்ர்கள் குணமான பின்பு அவர்கள் வந்து தங்குவதற்காக அந்த மண்டபத்தை அறிவித்தோம். ஆனால் திமுகவினர் அம்மை பாதிப்புக்கு உள்ளானவர்களை அங்கு தங்க வைப்பதாக பொய் பிரச்சாரம் நேற்று இரவு முதல் செய்து வருகிறார்கள்.

திருச்சியில் முடியாத பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் அமைச்சர் சேகர் பாபு தன் மீது எந்த தவறும் இல்லை என தொடர்ச்சியாக கூறி வருகிறார் ஆனால் இந்த சமய அறநிலையத்துறையில் என்ன நடக்கிறது என்பதை அவர் வேவு பார்த்து வருகிறார். அவர் பயத்தின் காரணமாகத்தான் அவ்வாறு செய்கிறார். அவருக்கு தகவல் கொடுத்தது யார் செய்திருந்தாலும் அவர்களை கண்டறிந்து அந்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவறை கண்டுபிடித்து விடுவார்கள் என்கிற பயத்தின் காரணமாகத்தான் அரசு என்ன செய்கிறது என்பதை வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அந்த பயமே எங்கள் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.

கடந்த ஆட்சியில் விளம்பரத்திற்காக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து விட்டார்கள்.

அதில் துவங்கப்படாத பல பணிகள் உள்ளது அதை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் பன்னெடுக்கு கார் நிறுத்தமிடம், பக்தர்கள் தங்குவதற்கு சொகுசு விடுதி உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளார்கள். எந்த பக்தர்கள் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள் என தெரியவில்லை அதனால் அந்த திட்டங்களை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.

கோவில்களில் நடைபெறும் தவறுகளை களைவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் 100 நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது தலைகீழாக மாற்றுவதற்கு அரசு ஒன்றும் சினிமா கிடையாது.

தமிழ்நாட்டில் உள்ள 50 முதுநிலை கோவில்களில் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்கிற நடைமுறையை அறிவித்து பின்பற்றி வருகிறோம். கோவில்களுக்கு வெளியே செல் போனை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ல். அதற்கு பணம் வசூலிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான் மக்கள் அதனை சரியாக பின்பற்ற வேண்டும்.

திருப்பதி கோவில்களுக்கு செல்லும் பொழுது பக்தர்கள் செல்போனை எடுத்து செல்வதில்லை அந்த மனநிலை தமிழ்நாட்டிலும் வர வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.