பைக் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

0 589
Stalin trichy visit

திருச்சி, அக். 2  திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே உள்ள மெய்யம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னையா மகன் தங்கபாண்டியன் (32). நேற்று இவரது இருசக்கர வாகனத்தில் அவருடைய தங்கை ஜெயபாரதி (30) மற்றும் ஜெயபாரதியின் மகன் சபரி (4) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு மணப்பாறை துவரங்குறிச்சி சாலையில்
ஜெயபாரதியின் ஊரான வெள்ளைய கவுண்டம்பட்டி நோக்கி
சென்று கொண்டிருந்தார்.
இருசக்கர வாகனம் பன்னாங்கொம்பு அருகே வரும்போது காவல்காரன்பட்டியில் இருந்து பன்னாங்கொம்பு நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனம் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தின் முன்னால் அமர்ந்திருந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது .

மேலும் தங்கபாண்டியன் மற்றும் ஜெயபாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் இவர்கள் அனைவரையும் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 வயது சிறுவன் பலியானார் . இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த புத்தாநத்தம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஜெயபாரதி மற்றும் தங்கபாண்டியன் ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர் . மேலும் இச்சம்பவம் பற்றி புத்தாநத்தம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.