அட்மா திட்டம் சார்பில் விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா
அட்மா திட்டம் சார்பில் வெளி மாவட்ட அளவில் செம்மறியாடு மற்றும் ஆடு வளர்ப்பு பற்றிய விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்தில் இருந்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒரத்தநாடு 17.03.2025 முதல் 18.03.2025 வரை 2 நாட்கள் கண்டுணர்வு சுற்றுலா சென்று கால்நடை வளர்ப்பு முக்கியத்துவம் , கால்நடைகளின் பயன்பாடு, ஆடுகளின் வகைகள், கொட்டைகள் அமைக்கும் முறை பரண்மேல் ஆடு வளர்ப்பு, கோழி இனங்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகள், எருமை இனங்கள் பராமரிப்பு மற்றும் தீவன மேலாண்மை, ஒருங்கிணைந்த கால்நடை தீவன மேலாண்மை பற்றி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாரதிதாசன், உதவி பேராசிரியர்கள் செந்தில்குமார், பாலசுந்தரம், நித்திய செல்வி, மேகலா, மகேஸ்வரி விவசாயிகளுக்கு விரிவாகவும் ஆட்டு கொட்டகை செம்மறி ஆடு மேய்ச்சல் நிலம் மாட்டு கொட்டகை , கோழி இனங்கள் , ஜப்பானிய காடை வளர்ப்பு , பசுந்தீவன புள் வகைகள், வேலி மசால், கம்பு நேப்பியர் புல் வகைகள்,10 சென்ட் மாதிரி தீவனப் பயிர் திடல் அழைத்துச் சென்று விரிவாக விளக்கி கூறினார்கள்.
இந்த கண்டுணர்வு சுற்றுலாவில் தச்சன்குறிச்சி, புதூர் உத்தமனூர்,மருதூர், நகர், மைக்கேல் பட்டி, நெருஞ்சலக்குடி, பூவாளூர், கொப்பாவளி , பண்பு அறம் சுற்றி, சேஷ சமுத்திரம் கிராமத்தில் இருந்து பல முன்னாடி விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர் இதற்கான ஏற்பாட்டினை லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி. சத்தியப்பிரியா , வேளாண்மை அலுவலர் கௌசல்யா,துணை வேளாண்மை அலுவலர் அய்யாசாமி, லால்குடி வட்டார வேளாண்மை உதவி அலுவலர்கள் சந்திரசேகர், விஸ்வநாதன், ராஜசேகரன், எடிசன், கவிதா, பிரவீன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன் , உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்திருந்தனர்.