மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்

0 300
Stalin trichy visit

திருச்சி, மே 28  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் உள்ள டவரில் ஏறி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுதல், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 5000/ வழங்குதல், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட வேண்டும், மேகத்தாதுவில் அணை கட்ட கூடாது, 2014, 2019ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு மோடி நிறைவேற்றாததை கண்டித்தும், விவசாயிகள் டெல்லி சென்று போராட்ட நடத்த விடாமல், உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட கூடாது என்று ரயில் பயணம் செய்ய கூடாது என்பதற்காக உறுதியான ரயில்வே பயணசீட்டை ரத்து செய்வது, செல்ல விடாமல் காவல்துறையை வைத்து கைது செய்வதும், 2000கிலோமீட்டர் தொலைவில் இருந்து பிரதமர் மோடி வாரணாசி வந்து போட்டியிடலாம், 2000கிலோமீட்டர் தொலைவில் இருந்து ராகுல்காந்தி கேரளாவில் வந்து போட்டியிடலாம் ஆனால், தமிழக விவசாயிகள் வாரணாசி சென்று போட்டியிட்டால் விளம்பரதிற்காக என்று உச்ச நீதிமன்றம் கூறுவது எந்த வகையில் நியாயம்? விவசாயிகளுக்கு உரிய நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.