மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

0 258
Stalin trichy visit

 

திருச்சி, நவ. 30  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக இன்று அளித்தனர்.

இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட பலர், விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, கடந்த 2021-ம் ஆண்டு குழுமணியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு நியாயம் கேட்டு 24 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவராகிய என் மீது 6 வழக்குகளும், என் சங்கத்தை சார்ந்த விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது . குறிப்பாக திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதை போல என் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுவதற்காக காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர் என்றார்.

இதற்கு காரணமான திருச்சி மாவட்ட துணை ஆணையர் அன்பு மற்றும் காவல்துறையினரை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.