அறிவுசார் மைய கட்டிட பூமி பூஜை : காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ பங்கேற்பு

0 415
Stalin trichy visit

 

முசிறியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக ரூ 1 கோடியே 39 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள அறிவு சார் மையத் கட்டிட பூமி பூஜை விழா நடைபெற்றது.

விழாவிற்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து . புதிய கட்டிடத்திற்கான பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், ஆணையர் கிருஷ்ணவேணி, நகர் மன்ற துணை தலைவர் சுரேஷ், கட்டிட பொறியாளர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முசிறி ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார். நகர அமைப்பு ஆய்வாளர் நேதாஜி மோகன், மேலாளர் காசிலிங்கம்,
நகர் மன்ற உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.