பழைய இரும்பு கடையில் திருட்டு : சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது

0 720
Stalin trichy visit

திருச்சி, நவ. 30  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள பழங்கனாங்குடி ரிங் ரோட்டில் பழங்கானாங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் சகாயராஜ் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அந்த இரும்பு கடையில் நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் இரும்பு கடையின் கேட்டு ஏறி குதித்து அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய இரும்புகளை கொள்ளையடித்து சென்றதை தனது செல்போனில் சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார் . இதனையடுத்து சகாயராஜ் வீட்டில் இருந்து கடைக்கு சென்று அவரை பிடிப்பதற்காக‌ அவர் வருவதற்குள், அந்த மர்ம நபர் இரும்புகளை திருடிக் கொண்டு சென்று விட்டான். அதன் மதிப்பு 50 ஆயிரம் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சகாயராஜ் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம தேடி வருகின்றனர். விசாரணையில் துவாக்குடி பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் அவன் இரும்புகளை விற்றது தெரிய வந்துள்ளது.

இது குறித்து துவாக்குடி போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.