கிராமப்புற மதிப்பீட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தந்தை ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள்

0 120
Stalin trichy visit

திருச்சி, பிப். 9  தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் மாணவர்களால் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு (PRA) மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம்,வாளாடி கிராமத்தில் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் மாணவர்களால் பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு மூலம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பி ஆர் ஏ என்பது ஒரு முறைமையாகும், இதில் கிராமப்புற மக்கள் தங்கள் வாழ்வியல் ,சூழல், தேவைகள் ,வளங்கள் மற்றும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு திட்டமிட்டு செயல்படுவதில் உதவி செய்கிறது.

இந்த பி ஆர் ஏ என்பது மக்களுக்கு உள்ளூர் வளங்கள் மற்றும் தேவைகளை அறிதல், திட்டமிடல் மற்றும் முடிவு எடுத்தல், நிலைத்தன்மையை உறுதிப்படுத்தல், மக்களின் பங்கேற்பை ஊக்குவித்தல், மக்களின் நம்பிக்கையை அதிகரித்தல், துல்லியமான தகவல், செலவு மற்றும் நேர குறைப்பு, உரிமை உணர்வு மற்றும் நிலையான தீர்வுகள் ஆகியவற்றை பற்றி எடுத்துரைக்கிறது.

இந்த விழிப்புணர்வை பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு மூலம் அஹமது இஸ்மாயில்.அ,அன்புச்செல்வன்.நீ,அர்ச்சுதன் .பி,அருண்குமார்.அ,பாலாஜி. செ,தனுஷ்ராஜ்.ச,தரணி.தா,தருண்.தி,பிரான்சிஸ் சேவியர்.எ மற்றும் கோகுல்.ஏ ஆகியோர் எடுத்து நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.