திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

0 104
Stalin trichy visit

திருச்சி, பிப்.9  திருச்சி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்  திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் (09.02.2026) திங்கட்கிழமை காலை அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தில்
நடைபெற்ற விழா நிகழ்வில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் , ஆணையர் திரு.லி. மதுபாலன் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் உணவு அருந்தினார்கள் .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். நிரந்தர, தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்,. ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் என மொத்தம் ஆயிரத்து 3,243 பணியாளர்கள் பயன்பெற உள்ளனர்.

இத்திட்டத்தை தொடங்கி வைத்ததும் ஒவ்வொரு நாளும் காலையில் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என  மேயர்  தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் துணை ஆணையர்  க.பாலு, மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், நகரப் பொறியாளர் சிவபாதம் ,நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி ,உதவி ஆணையர் சென்னுகிருஷ்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.