கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து
மணப்பாறை அருகே கரும்பு தோட்டத்தில் திடீரென பற்றிய தீ போராடி அணைத்த தீயணைப்புத்துறையினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருமலையில் வெங்கடேஷ் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆலைக் கரும்பு பயிரிட்டுள்ளார். நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இன்று காய்ந்த சருகுகளில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சற்று நேரத்தில் தீ மளமளவென பரவி கரும்பு பயிர் முழுவதும் பற்றி எரியத் துவங்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துவரங்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேர போராட்டத்திற்குப்பின் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.