மணப்பாறை அருகே மலையில் பற்றிய தீ

0 156
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 30  மணப்பாறை அருகே மலையில் பற்றிய தீ பற்றியதால் பரபரப்பு.
வனத்துறை மற்றும் இளைஞர்கள் தீயை அணைத்தனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வேலக்குறிச்சி பகுதியில் அதிக அளவில் மலைகள் உள்ள நிலையில் இன்று இரவு திடீரென அப்பகுதியில் உள்ள காயமலையில் மரங்கள், செடிகள் மற்றும் சருகுகளில் தீ பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு உள்ள செடி கொடிகளை வைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்தது. மலைப்பகுதியில் உள்ள காய்ந்த லெமன் வகை புல் செடிகள் மற்றும் செடி கொடிகள் தீயில் எரிந்தன. இளைஞர்கள் மற்றும் வனத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.