வைக்கோல் போரில் தீ : போராடி அணைத்த தீயணைப்புத்துறையினர்
மணப்பாறை அருகே குழந்தைகளின் விளையாட்டால் பற்றி எறிந்த வைக்கோல் போர்
போராடி தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு
திருச்சி, பிப். 22 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமரம்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது வீட்டின் அருகே வைக்கோல் போர் இருந்தது. அதன் அருகே தீக்குச்சியை விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீர் என கை சுடவே தீக்குச்சியை தூக்கி எறிந்த போது அது வைக்கோல் போர் மீது விழுந்தது. இதனால் வைக்கோல் போர் பற்றி எரியவே அருகில் குடிசை வீடுகளும் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இது பற்றி தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் வையம்பட்டி தீயணைப்புத் துறையினரும் மூன்று தனியார் தண்ணீர் லாரிகளிலும் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் போர் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.