பங்குச் சந்தை செயல்பாடுகள்: தேசிய கல்லூரியில் பயிலரங்கம்

0 199
Stalin trichy visit

திருச்சி, அக்.11 திருச்சி தேசிய கல்லூரி வணிகவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை சார்பில், பங்குச் சந்தை செயல்பாடுகள் மற்றும் செயலற்ற வருமான உத்திகள் குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர்(பொ) முனைவர்டி முத்துராமகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து, வணிகவியல் துறைத் தலைவர் ஷர்மிளா தொடக்கவுரை ஆற்றினார். வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவர் திரு. சி. ராமானுஜம் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில், சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரை வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவர் கர்ணா அறிமுகப்படுத்தினார்.

பயிற்றுநரான சுந்தர் பங்குச் சந்தை செயல்பாடுகள் மற்றும் செயலற்ற வருமான உத்திகள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார் அவர் பங்குச் சந்தையின் அடிப்படைக் கருத்துகள் வர்த்தக வழிமுறைகள் மற்றும் போர்ட்போலியோ பல்வகைப்படுத்தல் பற்றி விளக்கினார். சந்தை இயக்கவியல் பற்றிய அறிவு எவ்வாறு செல்வத்தை உருவாக்குவதற்கும் மற்றும் நிதி சுதந்திரத்திற்கும் உதவும் என்பது குறித்த நடைமுறை நுண்ணறிவுகளை குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

முடிவில் இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவர் சௌந்தரராஜன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியை இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தேவதர்ஷினி சுபத்ரா சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள் இந்த பயிலரங்கத்திற்க்கு வணிகவியல் துறை உதவி பேராசிரியர் நடராஜன் ஒருங்கிணை ப்பாளராக செயல்பட்டார்.
.

Leave A Reply

Your email address will not be published.