மணப்பாறையில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

0 82
Stalin trichy visit

திருச்சி, பிப்.10 மணப்பாறையில் தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி வழங்கிய தீயணைப்பு துறையினர்.

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவைகளில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு, தீயணைப்புத் துறை சார்பில் அடிப்படை தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி தீயணைப்பு நிலையங்களில் அளிக்கப்படுகிறது. அதன்படி திருச்சி மாவட்டம் மணப்பாறை தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்புத்துறையினர் தனியார் பாதுகாவலர்களுக்கு தீ பாதுகாப்பு
பயிற்சி அளித்தனர். பாதுகாவலர்கள் பணிபுரியும் இடங்களில் தீ விபத்துகள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளவும், தீ விபத்து காலங்களில் தீயை அணைக்கும் முறைகள் தீ விபத்துகள் ஏற்பட்டால் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அடிப்படை பயிற்சியும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளித்தனர். இதில் 30 க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.