மணப்பாறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

0 238
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை, பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர்பாபு (வயது 63),. இவர் காந்தி நகரில் தீபாவளிக்கு பயன்படுத்தக்கூடிய பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் உரிமம் முடிந்த பிறகும் சட்ட விரோதமாக பட்டாசுகளை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்த மணப்பாறை போலீசார் அவரிடம் இருந்து ரூ.8000 மதிப்புள்ள 20 பெட்டிகள் அடங்கிய பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.