கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்
திருச்சி, ஆக.5முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் கிழக்கு மாநகரம், காட்டூர் பகுதியில் உள்ள வட்டக் கழகங்கள் 38, 38 சார்பாக நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
வட்ட கழக செயலாளர்கள் தமிழ்மணி, .மன்சூர் அலி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் திரு.ஒப்பிலா மணி, மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழக செயலாளர் திரு.ஓ.நீலமேகம் மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் செங்குட்டுவன் லீலாவேலு குணசேகரன்
பொன்செல்லையா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் உரையாற்றியஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மகளிருக்கு இலவச பயணத்திற்கு தனது முதல் கையெழுத்தையும் வரும் செப்டம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தையும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்காக செய்திருக்கிறார் பள்ளியில் காலை உணவு திட்டத்தை பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு வருகின்ற போது காலையில் உணவு அருந்தாமல் படிக்க கூடாது என்பதற்காக கொண்டு வந்தார் என உரையாற்றினார்