வீட்டு தோட்டத்தில் புகுந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை மீட்ட தீயணைப்புத்துறையினர்

0 184
Stalin trichy visit

திருச்சி, மே 15  திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள பரமசிபுரம் 3 வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டின் தோட்டத்தில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. லால்குடி தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் மீட்டனர்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள பரமசிவபுரம் 3 வது குறுக்கு தெருவில் வசிப்பவர் ராஜாஜி. இவர் வீட்டு முன்பு தோட்டங்கள் அமைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் இந்த தோட்டத்தில் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு புகுந்தது. இதைக் கண்ட ராஜாஜி மற்றும் குடும்பத்தினர் பயத்தில் வீட்டுக்குள் ஓடிச் சென்றனர். பின்னர் இதுகுறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து அலெக்சாண்டர்,வீரர்கள் ராஜா, சசிகுமார், அருண்பாண்டியன், விஜய், பிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் தோட்டத்தில் பதுங்கி இருந்த 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டு அங்குள்ள வனப்பகுதியில் பாம்பை விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.