எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளின் முதலாம் ஆண்டு தொடக்க விழா
திருச்சி எஸ்ஆர்எம் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா
திருச்சி எஸ் ஆர் எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளின் முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழா எஸ்ஆர்எம் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாக முதன்மை இயக்குனர் முனைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினராக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திருப்பதி பங்கேற்று மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்
நிகர்நிலைப் பல்கலைக்கழக திருச்சி வளாக நிர்வாக இயக்குனர் டாக்டர் சம்பந்தம், எஸ் ஆர் எம் திருச்சி வளாக இணை இயக்குனர் டாக்டர் பாலசுப்ரமணியன் மருத்துவம் சார்ந்த படிப்புகளின் துணை இயக்குனர் டாக்டர் சிவக்குமார், செயல்முறை கல்லூரியின் தலைவர் டாக்டர் சுரேஷ் ,மருத்துவம் சார்ந்த படிப்புகளின் கல்லூரி முதல்வர் டாக்டர் குமார் எபினேசர் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியரும் அவரது பெற்றோரும் பங்கேற்றனர்.