போலீஸ் காதுலயே “பூ சுத்திய” சம்பவம்; எதுக்கு பொய் சொன்னீங்க!

0 355
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருணாச்சலநகரை சேர்ந்தவர் பஷீர்(வயது 45). இவருடைய மனைவி தாசின்பேகம். இவரது வீட்டுக்குள் 4 பேர் கும்பல் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம்

மற்றும் 5 பவுன் நகையை பறித்து சென்றதாக எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.  போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,

அங்கு அதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்பதும், அவர்கள் போலீஸ் நிலையத்தில் பொய்யான புகார் அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொய் புகார் அளித்ததற்கான காரணம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.