தமிழகத்தில் முதல் முறையாக அமைச்சரின் தெற்கு தொகுதி மக்களுக்கு பிரத்தியேகமாக “நம்ம அன்பில் இ-சேவை மையம்”

0 548
Stalin trichy visit

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்று சிறப்பான பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகரை பார்த்து மயங்கும் காலம் மாறி நல்ல தலைவரை பார்த்து தற்போது மயங்கி வரும் அளவிற்கு திமுக அரசின் பல்வேறு செயல்பாடுகள் பிரமிக்க வைக்கிறது.

தமிழகத்தின் இளம் அமைச்சராகவும், பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, இல்லம் தேடி கல்வியின் மூலம் பலர் இல்லறம் செழிக்க வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறமும், அவர் தொகுதி மக்களுக்காக மறுபுறமும் செயல்படும் விதமாக “நம்ம அன்பில் இ- சேவை மையம்” என்னும் செயலியினை திருச்சியில் அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த செயலியினை ஜமால் முகமது கல்லூரி பேராசிரியர் குணசீலன், லண்டன் செந்தில் ஆகியோரின் முயற்சியில் டெல்டா மென்பொருள் நிறுவன உரிமையாளர்கள் தர்மராஜ் மற்றும் வினோத் ப்ரியன் வடிவமைத்து பாராட்டைப் பெற்றனர்.

பேராசிரியர் குணசீலன்

இதுக்குறித்து பேசுவதற்காக பேராசிரியர் குணசீலனை தொடர்பு கொண்டு பேசினோம்….”தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த நம்ம அன்பில் இ சேவை மையம் என்னும் மென்பொருள் செயலினை தற்போது அமைச்சர் முன்னிலையில் அறிமுகப்படுத்தினோம். இந்த செயலி மூலம் திருச்சி மாவட்டம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மக்கள் தங்களுடைய எந்தவிதமான குறைகளையும் இந்த செயலி மூலம் பதிவிடலாம். இதன் மூலம் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்கள், மருத்துவமனைகள், சாலை வசதி என அத்தனை வசதிகளும் இந்த செயலியில் இருக்கும். இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை பதிவு செய்வதன் மூலம் நேரடியாக அமைச்சரின் மேற்பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.