மணப்பாறையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
திருச்சி, ஆக.20 மணப்பாறையில் ராஜீவ்காந்தியின் 83 வது பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் முன்னாள் பாரதபிரதமர் ராஜீவ்காந்தியின் 83 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர தலைவர் முருகேசன் தலைமையில் பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள நேரு சிலை, திருச்சி சாலையில் உள்ள காந்தி சிலை மற்றும் கோவில்பட்டி சாலையில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் கணபதி, கே.எம்.பி. பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் நஜீம், வழக்கறிஞர் ஜான் போஸ்கோ, மாவட்ட செயலாளர்கள் வீரபாண்டி, கலைராஜ், வட்டார தலைவர்கள் சத்தியசீலன், பொன்னுச்சாமி, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சரோஜா, மல்லிகா உள்ளிட்ட அக்கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.