தொட்டியம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 11
Stalin trichy visit

திருச்சி, ஆக.20 திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தலைமையில் துறை அதிகாரிகளுடன் பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து முதலிப்பட்டி ஊராட்சியில் நாற்றங்கால் உற்பத்தி முறையாக நடக்கிறதா? என்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள், தொட்டியம் தாலுகா, எம்.களத்தூர் ஊராட்சியில் 15 ஆவது நிதிக் குழு மானியத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஆரம்ப சுகாதார நிலையப் பணிகளை ஆய்வு நேற்று செய்தார். தொடர்ந்து, ஏலூர்பட்டி மின்வாரிய அலுவலகப் பதிவேடுகள், அங்கன்வாடி மய்யத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு மாண வர்களுடன் கலந்துரையாடினார். ஏலூர்பட்டி கூட்டுறவு சங்க நியாயவிலைக் கடையில் ரேசன் பொருட்கள் இருப்பு மற்றும் எடை மெஷின்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தவர், கிராம நிர்வாக அலுவலகப் பதிவேடுகளையும் பார்வையிட்டார். வேளாண்மைத் துறையின் கீழ்
தோளூர்பட்டி கிராமத்தில் 2.50 ஏக்கர் பரப்பளவில் ‘கிர்னார் 5’ ரக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட் டுள்ள வயலை நேரில் ஆய்வு செய் தார். தொடர்ந்து விவசாயியிடம் விதை மானியம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் குறித்துக் கேட்டறிந்த கலெக்டர், மின்னணு பயிர் கணக்கெ டுப்பு மற்றும் நில உடமை பதிவேற்றப் பணிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, முதலிப்பட்டி கிராமத்தில் நாற்றங்கால் உற்பத்தி முறை யாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்த கலெக்டர், தொட்டியம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் ‘போஷான் டிராக்கர்’ செயலி பயன்பாடு, தொட்டியம் அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு மருத்துவமனையில் மருந்து இருப்பு, நோயாளி பராமரிப்பு குறித்தும் நேரில் பார்வையிட்டார்.

ஆய்வுக்குப் பின், தோளூர்பட்டி முத்தரையர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு முன் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை, வேளாண் மைத்துறை, மகளிர் திட்டங்களின் சார்பில் 11 பயனாளிகளுக்கு மொத் தம் ரூ.9,00,600 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் ராகவன், மற்றும் தொட்டியம் வட்டாட்சியர் லஜப திராஜ், அனைத்துத்துறை அரசு அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.