திருச்சி விமான நிலையத்தில் 4 புதிய பயணிகள் ஏறும் பாலங்கள் பயன்பாட்டிற்கு வந்தன
திருச்சி, ஜூலை 17 திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனை யக் கட்டிடத்தில் மேலும் 4 புதிய பயணிகள் ‘போர்டிங் பிரிட்ஜ்’கள் (பயணிகள் ஏறும் பாலங்கள்)செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் விமான நிலை யத்தின் பயணிகள் சேவை மற்றும் உள்கட்டமைப்பு வச திகள் மேலும் மேம்படுத்தப் பட்டுள்ளன. புதிய ஒருங்கி ணைந்தமுனையக்கட்டிடம் மொத்தம் 10 பயணிகள்போர் டிங் பிரிட்ஜ்கள் மற்றும் 11 விமான நிறுத்துமிடங்களு டன் வடிவமைக்கப்பட்டுள் ளது. முதல் கட்டத்தில், 11, 12, 14, 16 மற்றும் 18 ஆகிய விமான நிறுத்துமிடங்களில் அமைக் கப்பட்ட5போர்டிங் பிரிட்ஜ் கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து 13, 15, 17 மற்றும் 19 ஆகிய விமான நிறுத்துமிடங் களில் அமைக்கப்பட்டுள்ள மேலும் 4 புதிய போர்டிங் பிரிட்ஜ்கள் ரூ.11.90 கோடி
மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள் ளன. இவற்றை நேற்று திருச்சி விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இந்த போர்டிங் பிரிட்ஜ்கள் மூலம் முனையக் கட்டிடத்தில் இருந்து நேரடியாகவும், சிரம மின்றியும் விமானத்தில் ஏறும் வசதி கிடைக்கும். முதியோர். மாற்றுத்திறனாளிகள், குறைந்த உடல் இயக்கத் திறன் கொண்டோர் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத் தும் பயணிகளுக்கு பாதுகாப் பான மற்றும் வசதியான பயண அனுபவம் வழங்கப் படும். கடுமையான வெயில், மழை உள்ளிட்ட பாதகமான வானிலை சூழல்களில் இருந்து பயணிகள் பாதுகாக் கப்படுவார்கள். விமானத்தில் ஏறுதல் மற்றும் இறங்கும் நேரம் குறைக்கப்பட்டு, பய ணிகளின் மொத்த பயண அனுபவம் மேம்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.