குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
திருச்சி, ஜூலை 17 குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V.வெங்கட் ஏற்பாட்டில் தற்போது கோடை காலத்தில் இருப்பதை விட அதிக வெப்பத்தின் காரணமாக மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞரின் நலன் கருதி குற்றவியல் வழக்கறிஞர்
சங்கத்தில் மூத்த வழக்கறிஞர்கள் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள் விக்கிரமாதித்தன் மணிவண்ணன், முன்னாள் துணைத் தலைவர்கள் செந்தில்நாதன், ஸ்ரீராம்,முன்னாள் அரசு வழக்கறிஞர் சபரி முத்து, செயற்குழு உறுப்பினர் அஸ்வின் குமார், சிவா, ஜோ தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர்
P. V.வெங்கட் ஆகியோர் இருந்தனர் மற்றும் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.