திருவெறும்பூரைஅடுத்த துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களம் ஊராட்சி தேவராயன் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டாஸ்மார்க் கடை ஊழியர் முசிறியை சேர்ந்த வீரமணியின் மகன் தர்மராஜ் (47) என்பவர் பணி முடிந்து விட்டு வீட்டிற்கு சென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டதுடன் அவர் வைத்திருந்த ரூ.3000 பணத்தையும் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்
இந்நிலையில் துவாக்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காட்டூர் அண்ணா நகரை சேர்ந்த அப்துல்லாவின் மகன் ராஜா முகமது (25) மற்றும் கொடிமர தெருவை சேர்ந்த ஜோன்ஸின் மகன் ஸ்டீபன் ஜோன்ஸ்( 30) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதேபோல் திருவெறும்பூர் சக்தி நகரில் உள்ள விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த ரூ.1500ஐ திருடிய காட்டூரை சேர்ந்த கோபால்( 26) மற்றும் பாஸ்கர் (29)ஆகிய இருவரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.