இலவச மிதிவண்டிகள்: எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன் வழங்கல்
திருச்சி, டிச. 22 திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் ஜமீன்தார் அரசு பள்ளியிலும், காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், தொட்டியம் அரசு மேல்நிலை பள்ளியிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.