பி.கே. அகரத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பி.கே. அகரம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் ஐஒஎல் லென்ஸ் இலவசமாக பொருத்தும் முகாம் இன்று நடைப்பெற்றது.
பி. கே. அகரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் திருச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் இருங்களூரில் உள்ள திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் ஐஓஎல் லென்ஸ் இலவசமாக பொருத்தும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கண்களில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் இலவசமாக ஆலோசனைகள் வழங்கப்படும்.மேலும் இலவசமாக இரத்த, கொதிப்பு பரிசோதனை சர்க்கரை நோய் பரிசோதனை் செய்து மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும்.
கண்புரை உள்ள நோயாளிகளை தேர்வு செய்து இருங்களூரில் உள்ள எஸ் ஆர் எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கண்புரை நீக்கம் செய்து ஐ ஒ எல் லென்ஸ் இலவசமாக பொருத்தப்படும்.மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு செல்லும் பயனாளிகளுக்கு
போக்குவரத்து செலவு, உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக செய்து தரப்பட்டது.
இம்முகாமில் பி.கே அகரம் ஊராட்சி மன்ற தலைவி மங்கையர்கரசி சோமசுந்தரம்,ஊராட்சி செயலாளர் இளையராஜா, மருத்துவர் பூங்கோதை, முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.