நமக்கு நாமே திட்ட பணிகளுக்கு தனியார் நிறுவனத்தினர் நிதி வழங்கல்

0 306
Stalin trichy visit

திருச்சி, ஜன.10 திருச்சிமாநகராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்வதற்கு மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதனிடம் காசோலை மற்றும் வரைவோலைகளை பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனத்தினர் வழங்கினார்கள்.
திருச்சிமாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள வார்டு எண்.49, சங்கிலியாண்டபுரம் குமரன் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது பகுதியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு மொத்த மதிப்பீடு ரூ.52.00 இலட்சத்தில் பொதுமக்களின் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு ரூ.17.33 இலட்சம் மற்றும் வார்டு எண்.5 திருவானைக்கோவில் செக்போஸ்ட் அருகிலுள்ள ரவுண்டானாவில் மாநகரை வரவேற்கும் பெயர்பலகை மற்றும் அலங்கார விளக்கு பொருத்தும் பணிக்கு மொத்த மதிப்பீடு ரூ.10.00 இலட்சத்தில் பொதுமக்களின் பங்களிப்பாக மூன்றில் விசாலா ஏஜேன்சீஸ் டைல்ஸ் நிறுவனத்தினர் ஒரு பங்கு ரூ.3.34 இலட்சம் வழங்கி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்வதற்கு மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், அவர்களிடம் காசோலை மற்றும் வரைவோலையாக பொதுமக்கள் சார்பாக வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் லோகநாதன் மற்றும் இளநிலைப்பொறியார திவாகர்,பாலருகன் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகராட்சியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் பொது மக்களின் பங்களிப்புடன் நீர்நிலை புனரமைப்பு (தூர்வாருதல் மற்றும் கரையினை பலப்படுத்துதல் பங்களிப்பு தொகை 50%), விளையாட்டு திடல் அமைப்பு, தெருவிளக்கு பொருத்துதல், பூங்கா உருவாக்குதல் மற்றும் மற்றும் மேம்படுத்துதல், எல்.இ.டி. மின்விளக்கு அமைத்தல், ‘சி.சி.டி.வி.’ கேமரா பொருத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மரக்கன்று நடுதல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டிடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் புனரமைத்தல், மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். மேலும் தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்தல் அல்லது மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்கு குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சியினை அணுகி உடனடியாக தேவைப்படும் வசதிகளை பெற்று பயன்பெறலாம் என்று மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.