யு.பி.ஐ.பண பரிவர்த்தனையில் கோளாறு : டாஸ்மாக் கடையை மூடிய இளைஞர்கள்

0 6
Stalin trichy visit

திருச்சி, செப். 28  உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரில் இயங்கும் அரசு டாஸ்மாக் கடையில் யு.பி.ஐ. பண பரிவர்த்தனை இல்லை என்று தெரிகிறது. இதனால் நேற்று ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் டாஸ்மாக் கடை விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடையின் கதவை (ஷட்டர்) இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் ஜெய்சங்கர், உப்பிலியபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவிநாயகம் ஆகியோர் அங்கு வந்து விசாரித்தனர். அப்போது, கடந்த ஒரு வார காலமாக சம்பந்தப்பட்ட கடையில் பயன்படுத்தப்படும் பணப்பரிவர்த்தனை செய்யும் மெசினில் கோளாறு ஏற்பட்டதால், திருச்சிமாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதும், கோளாறு சரி செய்த பின் திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்பதும் தெரியவந்தது. போலீசார், இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.