SC/ST மற்றும் PCR வழக்குகளில் சட்டத்திற்கு புறம்பான வழக்குப் பதிவுகளைத் தடுக்கக் கோரி அமைச்சரிடம் மனு

0 19
Stalin trichy visit

SC/ST மற்றும் PCR வழக்குகளில் சட்டத்திற்கு புறம்பான வழக்குப் பதிவுகளைத் தடுக்கக் கோரி அமைச்சர் அவர்களிடம் மனு

SC/ST மற்றும் PCR சட்டங்களின் கீழ் சட்டத்திற்கு புறம்பாக வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து, BC, MBC, DNT மக்களின் சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று BC, MBC, DNT பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவில், SC/ST மற்றும் PCR சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யும் போது உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் உண்மைத் தகவல்கள் முறையாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்திற்கு புறம்பான அல்லது ஆதாரமற்ற வழக்குப் பதிவுகள் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இதுபோன்ற வழக்குகளால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் BC, MBC, DNT மக்களின் சட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது BC, MBC, DNT பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஓவை தியாகராஜன், அகில பாரத பார்க்கவ குல சங்கம் நிறுவனத் தலைவர் திருமலை எம். ரவி, உப்பிலிய நாயக்கர் மாநிலத் தலைவர் ஜெகநாதன், ஆ. தங்கவேல் பாண்டியன் – மாநிலத் துணைத் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் கோவை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வித்தியா ஆகியோர் உடன் இருந்தனர்.

BC, MBC, DNT மக்களின் உரிமைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.