திருச்சி மாவட்டத்தில் 2,663 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
திருச்சி, அக்.3 திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2,663 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 22.06.2026 முதல் 27.09.2026 வரை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தம் 3,341 ஆகும். இதில், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 1,205, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை 726. மணப்பாறை அரசு தலைமை மருத்துவ மனை 854, துறையூர் அரசு மருத்துவமனை 556 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. அக்.1-ஆம் தேதி வரை 2,657 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கப்பட்டுள்ளது.
இதில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் துறையூர் அரசு மருத் துவமனை 1,375, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை 604. மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை 678 வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 684 குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக தங்கமோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவம னையில் 6 தாய்மார்களின் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அறநிலையத்துறை அமைச்சர் சீ. ரமேஷ், நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியர் பிரத்திக் தாயள், மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி, மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் எஸ்.குமரவேல், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் கோபிநாத், துணை இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.