முதலமைச்சரிடம் அரசு மருத்துவமனை செவிலியர்கள் மனு

0 179
Stalin trichy visit

திருச்சி, மே. 9 திருச்சி அரசு மருத்துவமனை சார்பில் அனைத்து செவிலியர்கள் மருத்துவமனை நுழைவு வாயிற் அருகே நேற்று முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் திருச்சி அரசு மருத்துவமனை நோயாளிகளின் நலன் கருதி சிறந்த சேவையை நோயாளிகளுக்கு அளித்திட புதிய கட்டிடம் 110 கோடியில் கட்டப்பட்டு வருகின்றது. அதில் 700 நோயாளிகள் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு நோயாளிகளுக்கு நல்ல சேவை, திறம்பட கவனித்திட தேவையான செவிலியர்களை பணியில் அமர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.