அரசுப்பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்

0 420
Stalin trichy visit

திருச்சி, அக். 30  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளி உபகரணங்களை ஒன்றிய கவுன்சிலர் இன்று வழங்கினார்.

புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆலம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் ஜெனிபர் ஜெனிவாஹென்றிபிரபா பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் பள்ளி உபகரணங்களான பீரோ, பென்ச், சேர் உள்ளிட்ட பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா அவர்களிடம்
வழங்கினார்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துனை தலைவர் வின்சென்ட், ஊராட்சி உறுப்பினர்கள் சேவியர், காமராஜ்,கண்ணன், முக்கியஸ்தர்கள் ராஜ்,பெரியசாமி, பிரகாஷ் ராமதாஸ், சோமு, அந்தோணிசாமி ஊவனூர் டைலர் செல்வராஜ் ,வின்சென்ட், சுரேஷ்,மூர்த்தி கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.