மூதாட்டியை அடித்துக் கொன்ற பேரன் கைது

0 163
Stalin trichy visit

திருச்சி, செப். 18  திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியம் காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்று மகன் மகள்கள் உள்ளனர். இந் நிலையில் ராஜேந்திரன் தொட்டியத்தில் வேலை பார்த்தபோது வள்ளுவர் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மனைவி தனபாக்கியம் (64) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் பழக்கம் கள்ளக்காதலாக தொடர்ந்தது. அவரது வீட்டிற்கு ராஜேந்திரன் அடிக்கடி சென்று வந்த நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனபாக்கியத்தின் கணவர் தர்மலிங்கம் இறந்துவிட்ட நிலையில் தனபாக்கியத்திற்கு குழந்தைகள் யாரும் இல்லாததால் ராஜேந்திரன் தனபாக்கியம் வீட்டிலேயே தனது வசிப்பிடத்தை மாற்றி கொண்டார். இவரது முதல் மனைவி சாந்தி திருச்சியில் பிள்ளைகளுடன் வசித்த நிலையில் இருவருக்கும் அதிக தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது. ராஜேந்திரனும், தனபாக்கியமும் கணவன் மனைவியாகவே தொட்டியத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4-ந்தேதி தனபாக்கியம் தொட்டியம் கடைவீதிக்கு சென்று மளிகை சாமான், இறைச்சி ஆகியவற்றை வாங்கி வந்து வீட்டில் வைத்துள்ளார். பின்னர் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு வரை காத்திருந்த ராஜேந்திரன் தனபாக்கியத்தின் அண்ணன் மகன் தங்கராஜ் என்பவரிடம் தனபாக்கியம் மதியம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களில் தேடியும் தனலட்சுமி கிடைக்கவில்லை.

இதுகுறித்து ராஜேந்திரன் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் 4-ம் தேதி தனபாக்கியத்தை அவரது உறவினர் காந்தி நகரை சேர்ந்த ராஜாங்கம் மகன் ஹரிஹரசுதன் (35) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் கடைசியாக சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கள்ளக்குறிச்சியில் இருந்த ஹரிஹரசுதனை பிடித்து வந்து காவல் நிலையத்தில் முறைப்படி விசாரித்தனர்.

அப்போது ஹரிஹரசுதன் தனபாக்கியத்திடம் 3 ஆயிரம் ரூபாய் செலவுக்காக வாங்கியதும் மீண்டும் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் பொது இடங்களில் தனபாக்கியம் கடனை கேட்டு வந்ததாகவும், பணத்தை தராததால் அவதூறாக திட்டியதால் பணம் தருவதாக கூறி காந்தி நகரில் பின்பக்கம் உள்ள முள் காட்டிற்கு தனபாக்கியத்தை அழைத்து சென்று கட்டையால் அடித்து கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தனபாக்கியம் உடலை சாக்குப் பையில் கட்டி வாய்க்காலில் வீசிவிட்டு வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஹரிஹரசுதனிடம் போலீசார் ஒன்னரை லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் ஹரிஹரசுதன் வாய்க்காலில் சடலத்தை வீசி சென்றதாக கூறிய இடத்தில் மூதாட்டியின் சடலத்தை போலீசார் மீட்டனர். உடல் உருகுலைந்து எலும்பு கூடாக இருந்த நிலையில் தனபாக்கியம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொடுத்த கடனை திருப்பி கேட்டதற்கு பேரன் முறை உறவு உள்ள இளைஞர் மூதாட்டியை கொடூரமாக அடித்துக் கொன்று சாக்குப்பையில் கட்டி வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

Leave A Reply

Your email address will not be published.