திருச்சியில் பசுமை தமிழகம் இயக்கம் தொடக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (24.9.22) சென்னை வண்டலூரிலிருந்து தமிழகம் முழுவதும் பசுமைப் பரப்பை அதிகரித்திடும் வகையில், பசுமை தமிழகம் இயக்கத்தினைத் தொடங்கி வைத்தார்கள்.
இதனைத்தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார், இ.ஆ.ப. வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன், மாவட்ட வன அலுவலர் திரு.ஜி.கிரண், இ.வ.ப., ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர் . இந்நிகழ்வில் மாநகராட்சி கோட்டத் தலைவர்கள் திருமதி.விஜயலட்சுமி கண்ணன்,திருமதி.துர்காதேவி, மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.விஜயா ஜெயராஜ், திரு.நாகராஜ், திரு.சுரேஷ் குமார் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.