திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டம்
திருச்சி, ஜூன் 24 திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தலைமையில் மாநகராட்சிஅலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத்தலைவர்கள் துர்காதேவி, ஜெயநிர்மலா, துணை ஆணையர்கள் நாரயணன், செல்வ பாலாஜி, உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.