ஜி.டி. விரைவு ரயிலை திருச்சியிலிருந்து இயக்க வேண்டும் : பிரதமருக்கு எம்.ஜி.ஆர்.நற்பணி மன்றம் கோரிக்கை

0 320
Stalin trichy visit

G T எக்ஸ்பிரஸ் ரெயிலை நம்ம திருச்சிராப்பள்ளியில் இருந்து புதுதில்லி ஜம்மு வரையில் தினசரி ரயிலாக கிசான் ரயிலாக அதாவது விவசாயிகள் ரயிலாக இயக்கப்பட வேண்டும் என்று பாரதப் பிரதமர் மோடிஜியை தொடர்ந்து ஏழு எட்டு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சிதம்பரம் கடலூர் விழுப்புரம் திண்டிவனம் செங்கல்பட்டு வழியாக சென்னை விஜயவாடா நாகபுரி மதுரா புது தில்லி ஜம்மு வரை இயக்கப்பட்டால் ஆயிரக் கணக்கான தமிழக புராதன அபூர்வ ஆலயங்களுக்கு வட எல்லை வரையில் ஆன்மீகப்பயணங்கள் பெருமளவு ஏற்படும். மிக முக்கியமாக காவிரி நதிநீர் பகுதியில் விளைவிக்கும் அரிய நெல் அரிசி வகைகள் செங்கரும்பு வாழ இலை பல வகை வாழைப் பழங்கள் மற்ற பழ வகைகள் கீரைகள் வாசனை மலர்கள் மூலிகைகள் வட எல்லைகள் வரை கிடைக்கும். திருச்சிராப்பள்ளி கரூர் திண்டுக்கல் புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் போன்ற 15 மாவட்ட மக்களுக்கு நாட்டின் தலைநகர் புதுதில்லி இடையே தினசரி ரயில் தொடர்பு கிடைக்கும்.

மேலும்  பயணிகள் ரெயில்களில் சாதாரண ரயில் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். சிறப்பு ரயில் சேவை என்ற பெயரில் கூடுதல் கட்டணம் அதிகளவான எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சென்னை மும்பை தில்லி கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் டெமு ரயில்களில் 6 ,10, 15 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப் படுகிறது. ஆனால் திருச்சி , தஞ்சாவூர், கரூர் ,கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புறஙகளில் இயக்கப்படுகிற டெமு ரயில்களில் 30, 40, 50, 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. ஏழை எளிய நடுத்தர மக்கள் மீது இரட்டை முறை கட்டணம் வேண்டாம் என்பதை அழுத்தமாக சொல்லி வருகிறோம. அனைவரும் இரட்டைக் கட்டண முறைக்கு கடும் எதிர்ப்பை நிலைநாட்ட வேண்டும் என்று திருச்சி எம்.ஜி.ஆர். நற்பணி மன்ற நிறுவனச் செயலாளர் கண்ணன் (எ) ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.