முதியோர்களின் பாதுகாவலர்! கண்ணொளி வழங்கிய கவுன்சிலர்! வழக்கறிஞர் ந.செந்தில்

0 282
Stalin trichy visit

மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்களின் ஏற்பாட்டில் புனித அந்தோனியார் முதியோர் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம் கடந்த 18-8-2022 அன்று நடத்தப்பட்டது இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான முதியோர்களுக்கு கண் சிகிச்சை மருத்துவர்களும்,மனநல மருத்துவர்களும் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி அனைத்து மருத்துவ உதவிகளும் செய்தார்கள்,

இந்நிகழ்வினை ஆரம்ப சுகாதார மருத்துவர் கற்பகம் அவர்கள் ஒருங்கிணைக்க ஜோஸப் கண் மருத்துவ குழுவுடன் சிறப்பாக நடந்தேறியது,

அதன் தொடர்ச்சியாக இன்று முதியோர்களுக்கு இலவசமாக மாமன்ற உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில் கண்ணாடியும் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியினை புனித அந்தோனியார் முதியோர் இல்லத்தின் தலைமை நிர்வாகிகளும்,சிஸ்டர்களும்,முதியோர்களும் மாமன்ற உறுப்பினரை வெகுவாக மனதார பாராட்டினர், உடன் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.