உற்பத்தி இலக்கை முடிப்பதற்கு மிகை நேர பணி வழங்க கோரி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

0 257
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை உற்பத்தி இலக்கை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு மிகை நேர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று இரவு முதல் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் நேற்று இரவு முதல் 4ம் தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள் பேர் ஈடுபட்டுள்ளனர்

துப்பாக்கி தொழிற்சாலைகூட்டு போராட்ட குழு ஒருங்கினைப்பாரும் எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளருமான் ஜெயபால் தலைமையில் நேற்று இரவு முதல் உற்பத்தி இலக்கை உரிய காலத்தில் முடிக்க மிகை நேர பணி வழங்க வேண்டும். மெடிகல் கிளைம், ஜிபிஎப் உள்ளிட்ட பொருளாதார பலன்கள் உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்சாலையில் நிலவும் கடுமையான வெப்பத்தை குறைக்க தேவையான இடங்களில் மேற்கூரை அமைக்க வேண்டியும்
சிவில் எலக்ட்ரிக்கல் பராமரிப்பு பணிகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட துறை சார்ந்த 10 கோரிக்கைகளைவலியுறுத்தி நேற்று இரவு முதல் வரும் 4ம் தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இரவு நேரத்தில் ஐந்து பேரும் பகல் நேரத்தில் இரண்டு பேரும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.