முடி திருத்தும் கட்டணம் உயர்கிறது: சங்க செயலாளர் அறிவிப்பு

0 27
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 10 திருச்சி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் ப. தர்மலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு போன்றவற்றால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகின்றன. அது ஒருபுறம் இருக்க
முடி திருத்தும் தொழில் கருவிகள் விலை உயர்வு, தொழில் வரி மற்றும் உரிமை கட்டண வரிகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் முடி திருத்தும் தொழிலாளர்கள் மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆகவே முடி திருத்தும் கட்டணம் உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது . வருகிற ஜூன் 30-ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும்.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பாக அனைத்து நிர்வாகிகளையும் அமைப்பாளர்களையும் இளைஞர் அணி நிர்வாகிகளையும் வரவழைத்து கலந்து பேசி முடி திருத்தும் கட்டணம் உயர்த்துவது பற்றி பேசி முடிவு எடுக்கப்பட்டு பின்னர் கட்டண உயர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இந்த இக்கட்டான சூழலில் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு கொடுக்குமாறு தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.